ஆதி திருவரங்கம் – திருப்பணி கொடுமை!

திருவண்ணாமலை அருகில், பெருமாளைத்தான் திட்டனும். கருவறை வெளி வரை டைல்ஸ், மார்பில்ஸ், எல்லாத்தூண்களும் பெயிண்ட் மற்றும் டிஸ்டம்பர், படிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம், சிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு.. திருவரங்கத்தை விட பழையது. என்ன சொல்ல?

கோடை விடுமுறை, குழந்தைகள், தாயம்.

விடுமுறைக்கு அண்ணன் மகள்கள் வந்த பொழுது, பார்த்தா, மீரா, காயத்ரி மற்றும் அட்சயா சேர்ந்து செய்தவைகள். சின்ன வயதில் அம்மாவுடன் தாயம் விளையாடியது.. மறுபடியும் இப்போது ..

நேற்று, இன்று, நாளை

இன்று தமிழ் ஹிண்டுவில் எம்.ஜி.ஆரின் 100 பகுதியில், நேற்று, இன்று, நாளை எம்.ஜி.ஆரின் ஸ்டில் பார்த்தவுடன் சின்ன வயதில் அப்பா அம்மாவுடன் படம் பார்த்த ஞாபகம், எம்.ஜி.ஆருடைய அந்த பனை ஒலை தொப்பியும், ஸ்டைலும், பாடல் வரிகளும் மறக்க முடியாதவை..