39வது புத்தகக் கண்காட்சி

39வது புத்தகக் கண்காட்சி, வார வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை, வழக்கம் போல் பதிப்பாளர்கள், கடை அமைத்தோர்களுக்கு பெரிய வியாபாரம் இல்லை என்று படித்தது (சமஸ் – தமில் ஹிந்து) சரியே.

தீவுத்திடலுக்கு இரண்டு வாசல் உண்டு, பபாசி இணையத்திலோ வேறு எங்கும் இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை, நிறைய பேர் (!!) அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் எண்ணம். ஒய்எம்சிஏவில் இருந்து மாற்றியது எதுக்கு? அங்கவே வசதியாக இருந்தது, அங்கே இருந்திருந்தால் நிறைய விற்பனை ஆகியிருக்குமோ என்னமோ? இவ்வளவு செலவு செய்கிறவர்கள் இதெல்லாம் யோசிச்சாங்ககளா?

சரி, இந்த தடவை, காந்தி மற்றும் அவரது வழியில் வந்த வினோபாவே மற்றும் ஜே.சி.குமரப்பா மற்றும் ரமணர் பற்றிய புத்தகங்கள்.

IMG_20160610_082425 IMG_20160610_082554 IMG_20160610_082620 IMG_20160610_082640 IMG_20160610_082655 IMG_20160610_082705 IMG_20160610_082713 IMG_20160610_083744

மூங்கில் மூச்சு – புத்தகம்

வெகு நாளைக்குப்பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தகம். சுகாவின் வலைப்பதிவை MOONGIL MOOCHUபார்த்துவிட்டு, கமல் ரசித்த குஞ்சு கதாப்பாத்திரம் எப்படித்தான் இருக்கும் ஒரு ஆர்வத்தில் மூங்கில் முச்சை ஒரே மூச்சில் நேற்று இரவு படித்தேன்.

என் நினைவு தெரிந்த வரை சுஜாதாவுக்கு மட்டுமே இந்த வகை லாவகம் சாத்தியம். வயிறு குலுங்க திநவேலி பாஷையால் சிரிக்க வைத்து விட்டார். அவரது பால்ய, இளமைக்கால (விடலை!) நினைவுகள் தூண்டிவிட்டது என்னுடைய நினைவுகளையும் தான்.

இந்தியப் புதையல் ஒரு தேடல்

ஒரு மேற்கத்திய கடவுள் நம்பிக்கையற்றவரின் ஆன்மீகத் தேடுதல். மொழிபெயர்ப்பு கொஞ்சம்100-00-0002-221-2_b-01 கடினமானது, ஒரிரு அத்தியாயம் தாண்டியவுடன் பழக்கமாகிவிடலாம், முக்கியமான இடங்களில் மொழிபெயர்ப்பு புரியவில்லை, ஆங்கிலப்பதிப்பை நேரடியாக படிக்கவேண்டும்.

இன்றைய தலைமுறையில் ஆன்மீகத் தேடல் இருந்து ஆனால் மதம், குழு, ஆஸ்ரமம், மடாதிபதிகள் ஆகியவற்றின் நம்பிக்கை இன்றி தானே சுய பரிசோதனை செய்து அடையவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டியது. இதில் அவர்களுக்கு பதில்களும் உத்வேகமும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன்.

எப்படியோ ஒரு ஐரோப்பிய மனிதனின் பார்வையில் இந்தியாவின் ஆன்மீக வரலாறாக (1930) கண்டிப்பாக படிக்கலாம்.

பால் ப்ரண்டனுக்கு நிகழ்ந்தது தற்செயலா, விதியா, ஊழ்வினையா அல்லது ரமணரின் கருணையா?

ரமணரைப்பற்றி படிக்கும் பொழுது இளையராஜாவின் ரமணைப்பற்றி பாடிய பாடல்களை 15 வருடம் முன்பு தினமும் அலுவலகத்தில் கேட்டது பசுமையாக நினைவில் வருகிறது. வருடம் 2000ல் வாங்கிய பரணிதரனின் “அருணாச்சல மகிமை” எனது புத்தக அலமாரியிலிருந்து கூப்பிடுகிறது.

நான் யார்?

தென்னாப்பிரிக்காவில் காந்தி

978-93-8414-904-8_b-01காந்தியின் சுயசரிதை, தரம்பால் அவர்களுடய புத்தகம் (தலைப்பு ஞாபகம் இல்லை) ஜெயமோகனின் இன்றைய காந்திக்கு அடுத்து சமீபத்தில் படித்த புத்தகம் “தென்னாப்பிரிக்காவில் புத்தகம்”.

இதுவரை நான் படித்த மொழிபெயர்ப்பு செய்த புத்தகங்களில் மொழிபெயர்ப்பு என்று உணரமுடியாத அளவுக்கு அருமையான மொழி நடை. சிவசக்தி சரவணணுக்கு பாராட்டு. குஹாவின் கடுமையான உழைப்பு பக்கத்திற்கு பக்கம் தெரிகிறது. இதுவரை வெளிவராத நிறைய கடிதங்கள், முக்கியமாக சமகாலத்திய ஆதாரங்களை ஒருங்கினைத்து ஒரு புதிய விளக்கம், இப்போதய காந்தி பற்றிய சில கருத்துகளை மறுத்து இப்படி நேர்ந்திருக்கலாம் என்று புது ஆதாரங்களை மூலம் நிருபித்தல். ஒரு நாவலுக்கான சுவாரசியம்.

அட்டன்பரோவின் காந்தி படத்தை பார்த்தவர்கள் அதில் காந்தி தென்னாப்பிரிக்காவில் சித்தரிக்கப்பட்டதிற்கும் இந்த புத்தகத்தில் குஹாவின் காலக் கிரமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் உறுத்தலாம்.

ஜெயமோகனின் இன்றைய காந்தி படித்தவர்கள் அதில் எப்படி காந்தி படிப்படியாக வெற்றி நோக்கி பயணித்தார் என்பதன் விரிவாக்காமாக இந்த நூலை எடுத்துக்கொள்ளலாம். அண்ணா ஹாசாரேவின் போராட்டம் தோல்வி என்று நினைப்பவரகள், அது காந்தியின் முறை என்று அறியாதவரகள். காந்தியின் எவ்வாறு ஆங்கிலேயர்களிடம் சிறிய கோரிக்கைகள் வைப்பது அது கிடைத்ததும் அடுத்த கட்டம், அடுத்த கட்டம் என்று கடைசியில் எப்படி தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு சலுகைகளை வென்று தந்தார் என்ற விரிவான 20 ஆண்டு போராட்டத்தை பல்வேறு கோணங்களில் தொகுத்திருப்பது சிறப்பு. காந்தியின் வளர்ச்சி, அவரின் புத்தி கூர்மை, போராட்டத்தின் அனைத்து கூறுகளையும் ஆராயும் தன்மை, மக்கள் சோர்வுரும் பொழுதோ அல்லது இழப்புகள் அதிகமாக இருக்கும் பொழுதோ எடுக்கும் நடவடிக்கைகள் ஆண்டுக்காண்டு மேம்படுவது கண்டிப்பாக நமக்கு எல்லோருக்கும் ஒரு பாடம்.

“என் வாழ்க்கையே என் செய்தி”!

பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை
பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

சமீபத்தில் படித்த புத்தகத்தில் மிக முக்கியமான புத்தகம், வழக்கமான இலக்கிய புத்தகத்திற்குர்ய சுவை குன்றாமால் படைக்கப்பட்ட கட்டுரை.

அறிமுகப்படுத்திய நண்பர் Gurumoorthy Vasan க்கு நன்றி பல.

நமது நாட்டின் விவசாயம் எப்படி படிப்படியாக சீரழிந்தது என்பதை மிக விரிவாக அதே சமயம் நமது தாத்தன் பாட்டன் காலத்து விவசாயம் எப்படி பார்க்கப்பட்டது என்பதையும் சும்மா வாய்க்கு வந்தது போல் சொல்லாமல், தகுந்த ஆதாரம் மூலம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஜெயமோகனுடைய முன்னுரைக்காகவே வாங்கினேன், படித்ததும், ஒரு நெடிய பெருமூச்சு, சிறிது துயரம், எப்பொழுது மறுபடியும் எதிலும் முழுமையை பார்க்க பழகப்போகிறோமோ! நமது தலைமுறைக்கு நாம் விஷத்தை தான் விட்டுச் செல்லப்போகிறோம்..

ஹிந்து விமர்சனம்

உடுமலை.காம்