வெகு நாளைக்குப்பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தகம். சுகாவின் வலைப்பதிவை பார்த்துவிட்டு, கமல் ரசித்த குஞ்சு கதாப்பாத்திரம் எப்படித்தான் இருக்கும் ஒரு ஆர்வத்தில் மூங்கில் முச்சை ஒரே மூச்சில் நேற்று இரவு படித்தேன்.
என் நினைவு தெரிந்த வரை சுஜாதாவுக்கு மட்டுமே இந்த வகை லாவகம் சாத்தியம். வயிறு குலுங்க திநவேலி பாஷையால் சிரிக்க வைத்து விட்டார். அவரது பால்ய, இளமைக்கால (விடலை!) நினைவுகள் தூண்டிவிட்டது என்னுடைய நினைவுகளையும் தான்.