in book

தென்னாப்பிரிக்காவில் காந்தி

978-93-8414-904-8_b-01காந்தியின் சுயசரிதை, தரம்பால் அவர்களுடய புத்தகம் (தலைப்பு ஞாபகம் இல்லை) ஜெயமோகனின் இன்றைய காந்திக்கு அடுத்து சமீபத்தில் படித்த புத்தகம் “தென்னாப்பிரிக்காவில் புத்தகம்”.

இதுவரை நான் படித்த மொழிபெயர்ப்பு செய்த புத்தகங்களில் மொழிபெயர்ப்பு என்று உணரமுடியாத அளவுக்கு அருமையான மொழி நடை. சிவசக்தி சரவணணுக்கு பாராட்டு. குஹாவின் கடுமையான உழைப்பு பக்கத்திற்கு பக்கம் தெரிகிறது. இதுவரை வெளிவராத நிறைய கடிதங்கள், முக்கியமாக சமகாலத்திய ஆதாரங்களை ஒருங்கினைத்து ஒரு புதிய விளக்கம், இப்போதய காந்தி பற்றிய சில கருத்துகளை மறுத்து இப்படி நேர்ந்திருக்கலாம் என்று புது ஆதாரங்களை மூலம் நிருபித்தல். ஒரு நாவலுக்கான சுவாரசியம்.

அட்டன்பரோவின் காந்தி படத்தை பார்த்தவர்கள் அதில் காந்தி தென்னாப்பிரிக்காவில் சித்தரிக்கப்பட்டதிற்கும் இந்த புத்தகத்தில் குஹாவின் காலக் கிரமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் உறுத்தலாம்.

ஜெயமோகனின் இன்றைய காந்தி படித்தவர்கள் அதில் எப்படி காந்தி படிப்படியாக வெற்றி நோக்கி பயணித்தார் என்பதன் விரிவாக்காமாக இந்த நூலை எடுத்துக்கொள்ளலாம். அண்ணா ஹாசாரேவின் போராட்டம் தோல்வி என்று நினைப்பவரகள், அது காந்தியின் முறை என்று அறியாதவரகள். காந்தியின் எவ்வாறு ஆங்கிலேயர்களிடம் சிறிய கோரிக்கைகள் வைப்பது அது கிடைத்ததும் அடுத்த கட்டம், அடுத்த கட்டம் என்று கடைசியில் எப்படி தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு சலுகைகளை வென்று தந்தார் என்ற விரிவான 20 ஆண்டு போராட்டத்தை பல்வேறு கோணங்களில் தொகுத்திருப்பது சிறப்பு. காந்தியின் வளர்ச்சி, அவரின் புத்தி கூர்மை, போராட்டத்தின் அனைத்து கூறுகளையும் ஆராயும் தன்மை, மக்கள் சோர்வுரும் பொழுதோ அல்லது இழப்புகள் அதிகமாக இருக்கும் பொழுதோ எடுக்கும் நடவடிக்கைகள் ஆண்டுக்காண்டு மேம்படுவது கண்டிப்பாக நமக்கு எல்லோருக்கும் ஒரு பாடம்.

“என் வாழ்க்கையே என் செய்தி”!

Write a Comment

Comment