அம்மா – தானியங்கி செய்தி

நேற்று மதியம் கைபேசி ஒலித்தது, உத்தர் பிரதேச எண், யாரு நம்ம கூப்பிடறாங்கன்னு கேட்டா, அம்மா!!! மழை, வெள்ளம், நிவாரணம், கொஞ்சம் அரசியல், சுயநலம் இல்லாதவள் இத்யாதி. வாட்ஸ்ஆப் போய், இப்போ தானியங்கி செய்தி வரைக்கும். புல் அரிக்குது இவங்க கரிசனம்.

மாயக்கணம் ஒன்றில் இங்கே ஆடும் முகமெல்லாம் அவனாகும் விந்தையை அறிவாயா?

தேடி சோறு நிதம் தின்று

தேடி சோறு நிதம் தின்று பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி

துன்பம் மிக உழன்று பிறர்வாழ

பல செயல்கள் செய்து நரைகூடி

கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு

இரையென மாயும்பல வேடிக்கை

மனிதரை போல நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?

— பாரதி