Musical Tribute to Venmurasu by Rajan Somasundaram

நண்பர் ராஜன் அவர்களுடைய இசை கண்டிப்பாக ஒரு புதிய முயற்சி,  என்னுடைய குறைந்த இசை அறிவில் இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ மற்றும் ரஹ்மான் அவர்களின் ‘ரோஜா’  கேட்ட போது அடைந்த அதே ‘ஆஹா..’ மகிழ்ச்சி, குதூகலம், பெருமிதம், பொறாமை என்ற கலவையான மனநிலை .. வெண்முரசு என்ற ஒரு ஒப்பற்ற காவியத்துக்கு ஒரு சிறப்பான மரியாதையை அளித்திருக்கிறது A Musical Tribute to Venmurasu by Kamal Haasan, Sriram Parthasarathy, Saindhavi, Rajan Somasundaram Epic Theme: Venmurasu Mahabharata […]

39வது புத்தகக் கண்காட்சி

39வது புத்தகக் கண்காட்சி, வார வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை, வழக்கம் போல் பதிப்பாளர்கள், கடை அமைத்தோர்களுக்கு பெரிய வியாபாரம் இல்லை என்று படித்தது (சமஸ் – தமில் ஹிந்து) சரியே. தீவுத்திடலுக்கு இரண்டு வாசல் உண்டு, பபாசி இணையத்திலோ வேறு எங்கும் இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை, நிறைய பேர் (!!) அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் […]

மூங்கில் மூச்சு – புத்தகம்

வெகு நாளைக்குப்பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தகம். சுகாவின் வலைப்பதிவை பார்த்துவிட்டு, கமல் ரசித்த குஞ்சு கதாப்பாத்திரம் எப்படித்தான் இருக்கும் ஒரு ஆர்வத்தில் மூங்கில் முச்சை ஒரே மூச்சில் நேற்று இரவு படித்தேன். என் நினைவு தெரிந்த வரை சுஜாதாவுக்கு மட்டுமே இந்த வகை லாவகம் சாத்தியம். வயிறு குலுங்க திநவேலி பாஷையால் சிரிக்க வைத்து விட்டார். அவரது பால்ய, இளமைக்கால (விடலை!) நினைவுகள் தூண்டிவிட்டது என்னுடைய நினைவுகளையும் தான்.

இந்தியப் புதையல் ஒரு தேடல்

ஒரு மேற்கத்திய கடவுள் நம்பிக்கையற்றவரின் ஆன்மீகத் தேடுதல். மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினமானது, ஒரிரு அத்தியாயம் தாண்டியவுடன் பழக்கமாகிவிடலாம், முக்கியமான இடங்களில் மொழிபெயர்ப்பு புரியவில்லை, ஆங்கிலப்பதிப்பை நேரடியாக படிக்கவேண்டும். இன்றைய தலைமுறையில் ஆன்மீகத் தேடல் இருந்து ஆனால் மதம், குழு, ஆஸ்ரமம், மடாதிபதிகள் ஆகியவற்றின் நம்பிக்கை இன்றி தானே சுய பரிசோதனை செய்து அடையவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டியது. இதில் அவர்களுக்கு பதில்களும் உத்வேகமும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன். எப்படியோ ஒரு ஐரோப்பிய […]

தென்னாப்பிரிக்காவில் காந்தி

காந்தியின் சுயசரிதை, தரம்பால் அவர்களுடய புத்தகம் (தலைப்பு ஞாபகம் இல்லை) ஜெயமோகனின் இன்றைய காந்திக்கு அடுத்து சமீபத்தில் படித்த புத்தகம் “தென்னாப்பிரிக்காவில் புத்தகம்”. இதுவரை நான் படித்த மொழிபெயர்ப்பு செய்த புத்தகங்களில் மொழிபெயர்ப்பு என்று உணரமுடியாத அளவுக்கு அருமையான மொழி நடை. சிவசக்தி சரவணணுக்கு பாராட்டு. குஹாவின் கடுமையான உழைப்பு பக்கத்திற்கு பக்கம் தெரிகிறது. இதுவரை வெளிவராத நிறைய கடிதங்கள், முக்கியமாக சமகாலத்திய ஆதாரங்களை ஒருங்கினைத்து ஒரு புதிய விளக்கம், இப்போதய காந்தி பற்றிய சில கருத்துகளை […]

பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

ஜெயமோகனுடைய முன்னுரைக்காகவே வாங்கினேன், படித்ததும், ஒரு நெடிய பெருமூச்சு, சிறிது துயரம், எப்பொழுது மறுபடியும் எதிலும் முழுமையை பார்க்க பழகப்போகிறோமோ! நமது தலைமுறைக்கு நாம் விஷத்தை தான் விட்டுச் செல்லப்போகிறோம்..